Sunday, August 2, 2009

மின்னலே நீ வந்ததேனடி - முதல் பயணம் I

பிள்ளையாரை வணங்கிவிட்டு திரும்பிய நான், அவளைக் கண்டவுடன் சற்று நேரம் அமர முடிவுசெய்தேன்.

பலூனை துரத்தி பிடித்துக்கொண்டிருக்கும் சிறுமியின் பாவாடைச் சட்டையின் அழகு, பூக்கடையிலிருந்து வரும் பூவாசம், பலூன்காரரின் சுருக்குப்பையிலிருந்து வரும் சில்லரைச் சத்தம், சிலுசிலுவென என்னை உரசிக்கொண்டிருந்த மாலைநேரத் தென்றல், கையில் இருந்த இனிய பொங்கலின் சுவையென, எதையும் உணரவிடாமல் என் ஐம்புலன்களையும் ஈர்த்துக்கொண்டவள் எதுவும் தெரியாதவள் போல நவகிரகங்களைச் சுற்றிக்கொண்டிருந்தாள்.

சிவப்பு தாவணி, என் தங்க நிறத்தவளுக்காகவே நெய்யப்பட்டது போலிருந்தது. அவள் நடைக்கேற்ப தாளம் போட்டுக்கொண்டிருந்த கொலுசின் ஒலியில் செவியையும், அவள் பாதங்களின் மென்மையில் பார்வையயும் செலுத்திய நான், யாரோ என் தோளில் கைவைப்பதையுணர்ந்து திரும்பினேன். லோகேஷ் நின்று கொண்டிருந்தான்.

புவனேஸ்வரில் தொடங்கிய நட்பு, "கிளம்புடா போலாம்" என்றான்.

இருடா என்று சொல்லிவிட்டு திரும்பினேன்.அவளை காணவில்லை, "ச்சே மிஸ் பண்ணிட்டியேடா" என மனம் சலித்துக் கொள்ள, அவளின் ஞாபகத்துடன் எழுந்து மீண்டும் ஒரு முறை பிள்ளையாரை வணங்கி விட்டு அவனுடன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச்சென்றேன்.

----------------------------------------------------

வழக்கம் போல் படியோரம் கூட்டமாகவும், பின்புறம் காலியாகவும் இருந்த பேருந்தில் ஏறினோம்.

"சூர்யா பேக்கரி இரடு" என (இது கன்னட இரண்டுங்க) இருபது ரூபாய் நோட்டுக்கு பத்துரூபாய் மீதியை மட்டும் உடனே வாங்கிக் கொண்டேன்.

கொடுத்துவிட்டு அடுத்த நபரிடம் "டிக்கெட்! டிக்கெட்!" என கலைய முற்பட்ட கண்டக்டரிடம் நானும் டிக்கெட் என்றேன். "இரு தருகிறேன்" என்பதை ஒரே சைகையில் காட்டி விட்டு முன்னே சென்ற நடத்துனரின் மீதான பார்வை விடுபட்டு, அவளை நோக்கி மனம் ஓட ஆரம்பித்தது.

விசில் சத்தம் கேட்க, காலியான சீட்டில் இருவரும் அமர்ந்தோம். வழக்கம் போல் ஜன்னலோர சீட்டு எனக்கு.

ஜன்னலில் முழங்கையை வைத்து, உள்ளங்கையை கன்னத்தில் வைத்து, நகங்களை வருடியவாறு ஏதோ சிந்தனை (எல்லாம் அவளப்பத்தித்தான்) மனதில் ஓட மெல்ல கூட்டம் குறைந்து கொண்டிருந்தது.

ஒரு நிறுத்தத்தில் சத்தம் அதிகமாக படியோரம் கவனம் திரும்பியது. ஏகதேசம் பஸ்ஸிலிருந்த பாதி பேர் இறங்கலானார்கள்.

மேகக்கூட்டம் விலக, சூரியனின் இளஞ்செங்கதிர்ப் பட்டு தெறிக்கும், தொட்டி நீர் போலானது என் மனம். அவளும் இதே பஸ்ஸில் நிற்பதைக் கண்டதும்.

"ஒருமுறையேனும் என்னைப் பாருடி" என மனதில் நினைத்துக் கொண்டே, என் விழிகளை அவள் மீது பதித்தேன்.

"பஸ்ஸ மெதுவா ஓட்டுயா" என டிரைவரைப் பார்த்துச் சொல்ல தோணிற்று. ஐம்புலன்களும் அடங்கிப் போக அமைதியாய் இருந்தேன்.

மையிட்ட அழகிய கண்கள், சின்னதாய் காதில் சிணுங்கிய ஜிமிக்கி, மெலிதான புன்னகை, மஞ்சளும், தங்கமும் கலந்த நிறம், நீள்வட்ட முகம் என ஒவ்வொரு அம்சமும் என்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்க, "வதனா, சீக்கிர இறங்கு" என ஒருத்தி அவள் கையைப்பிடித்து அவசரமாய் இழுக்க, செய்வதறியாது திகைத்தேன்.

படியில் இறங்கும் போது, ஒரு கையை தோழி இழுக்க, கடைக் கண்ணால் என் மீது ஒரு மின்னலை வீசிவிட்டு, அவள்பாட்டுக்கு இறங்கிவிட்டாள்.

திடீரென பஸ்ஸில் ஏறிய மூன்று பேரில் காக்கி, வெள்ளை உடையணிந்த ஆள், கண்டக்டரின் கையிலிருந்த கருவியை அவசரமாய் பிடுங்கி அருகிலிருந்த இன்னொருவரிடம் கொடுக்க, அவர் அதில் எதையோ நோண்டி விட்டு, நோட்டில் ஏதோ எழுதினார்.
இன்னொருவர் "டிக்கெட்! டிக்கெட்!" என ஒவ்வொருவரிடமும் வரிசையாக சரிபார்த்துக் கொண்டு வரும்போதுதான் உணர்ந்தேன், கண்டக்டர் இன்னமும் எனக்கு டிக்கெட் தரவில்லையென்பதை.



"டிக்கெட்" எங்களிடம் கேட்க, "துட்டு கொட்டாய்த்து, டிக்கெட் பரில்லா" (காசு கொடுத்தாச்சு, டிக்கெட் தரல) என கன்னடத்தில் லோகேஷ் கூற, நான் செக்கரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"சார்! இங்க ரெண்டு, Total எட்டு" என சொன்னவாறு ஒரு பேப்பரை நீட்டி"சார்! இதுல ஒரு கம்ப்ளைண்ட் கொடுங்க" என எங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.

அதன் பிறகு தான் தெரிந்தது அந்த கண்டக்டர் இன்னும் ஆறு பேருக்கு டிக்கெட் தரவில்லையென்று.

"ஹப்பா!" என பெருமூச்சு விட்டவாறு எனது நிறுத்தம் வர லோகேஷுடன் வீட்டை நோக்கி நடந்தேன்.



மனது முழுக்க அவள் நினைவுகளுடன், வாய் மெலிதாய் உச்சரித்தது அவள் பெயரை "வதனா

No comments:

Post a Comment