Sunday, August 2, 2009

மின்னலே நீ வந்ததேனடி - முதல் பயணம் II

அதிகாலையிலேயே அம்மா "அப்புறம் போலாம்"னு சொல்லியும் ,கேட்காமல் நண்பனைப் பார்க்க 20 கி.மீ , குளிரில் வண்டிய ஒட்டிட்டு வந்தது ஒன்றும் வீணாகப் போகவில்லை...

இப்படி சொந்தஊருக்கு வந்த நேரத்துல, இப்படி ஒரு சந்திப்பு மைசூர்ல பார்த்த அதே பொண்ணு வதனாவோட நடக்கும்னு நினைக்கக் கூட இல்ல...

அதிகாலையில, ஒருப்பக்கம் விசாலமாக கட்டப்பட்ட மாடி வீடுகளும், மறுப்பக்கம் கம்பிவேலி அங்கங்கே உடைந்து கிடக்கும் சின்ன மைதானமும், அதைத்தாண்டி தென்னைக் கீற்றினிடையே உதயமாகிக்கொண்டிருக்கும் சூரியனையும் ரசித்தபடி வண்டிய கோலப்பொடி டப்பா மீது மோதி நிறுத்த...

மனம் துள்ளிக்குதிக்க...

---------------------------------------------------------
அதிகாலை 6.00 am


சிதறிக்கிடந்த கோலப்பொடியை ஒரு முறைப் பார்த்துவிட்டு , அமர்ந்தபடியே என் பக்கம் தலையை திருப்பினால், ஒரு காலைக் கீழே ஊன்றி, மற்றொருக் காலை வண்டியிலேயே வைத்தப்படி அவளை நோக்கி "ஸாரி" என்றேன்.

எதும் பேசாமல் என்னையே கோபமாகப் பார்த்தாள், அவள் முகத்தில் ஏதோ யோசிப்பது தெரிந்தது. அனேகமாக அது என்னை மைசூரில் பார்த்ததைப் பற்றித்தான் இருக்கும்.

"கோபத்திலக் கூட அழகாத்தாண்டி இருக்கே" என எண்ணியவாறு "Excuse me, ஐ ம் ஷாரி" என்று மீன்டும் ஒரு முறை அழுத்தினேன்.

"உங்களை,, நீ நீங்க மைசூர் தானே ! நீங்களும் தமிழா!" - கேளுடி என எண்ணிக்கொண்ட நொடியில்

"இட்ஸ் ஒகே ! கவனத்தை வண்டியில வைங்க ! " - கோபமாக எழுந்தபடியே ...

"உன்னப் பார்த்ததுக்கபுறம் எப்படி!" - மெல்லியக் குரலில்

"என்ன சொன்னீங்க?"-கேட்காததுபோல் புருவத்தை உயர்த்தியபடியே

"எல்லா உண்மையைத் தான் சொன்னோம்!"- வேறுப்பக்கம் திரும்பியபடி, சாவியை திருகினேன் , வண்டியை ஸ்டார்ட் செய்வது போன்ற பாவனையுடன்.

லேஸாக முறைத்தபடி என்னையே பார்த்தாள்.

"ஸாரி,கோபப்பட்டலும் இத கண்டிப்பா நான் சொல்லித்தான் ஆகனும், நீங்க உண்மையிலேயே........."

"உண்மையிலேயே"

இதயம் high speed'ல துடித்தது, உடல் நீரின் கொதிநிலையைத் தாண்டியது.

எதாவது திட்டிட்டா?, "விட்றா மச்சா, நாம வாங்காத திட்டா?

வீட்ல இருந்து ஆள் கூப்பிட்ட?,"அப்பீட்டு"

அப்புறம் அவகிட்ட நா எப்படா பேசறது? " நல்ல யோசிச்சுக்கோ, எற்கனவே மிஸ் பண்ணீட்ட! ஏதாச்சு ப்ராப்லம்னா சாரி கேக்கற சாக்குல பேசிக்கலாம்"

சரி சொல்லித்தான் பாக்கலாமே! என்று ஒருமுடிவெடுத்தவாறு தலையை நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். எனக்கு நானே பேசிக்கிட்டிருந்த கோமலித்தனத்தை பார்த்தோ என்னவோ! மெல்லிய புன்னகை அவள் முகத்தில் பூத்திருந்தது. ஒரு கையைக் கட்டியவாரு,லேசான புன்னகையுடன், இடது கையையும், புருவங்களையும் ஒருசேர என்ன? என்பது போல அசைத்தாள்.

போலியாக தைரியத்தை வரவைத்துக்கொண்டு , இரு கைகளயும் சேர்த்து வண்டியின் மேல் மணிக்கட்டு படுமாறு சாய்ந்து,

"அழகாத்தான் இருக்கீங்க" என்றேன் மெல்லிய புன்னகையுடன்.

தீடீரென பின்னால் திரும்பி " அப்பா........" என்றாள்

"அய்யையோ" என்று அவசரமாக எழுந்து "உஸ் உஸ் ப்லீஸ் கத்தாதீங்க" என்றேன் வேகமாக இருக்கைகளையும் ஆட்டியபடி.

என் பக்கம் திரும்பியவள் குலுங்கியவாறு சிரித்தாள்...

"என்னடி ? அப்பா குளிச்சுட்டிருக்கார், என்ன வேணும்?" என்று வீட்டுக்குள் இருந்து ஒரு சத்தம் மட்டும்.

"ஒண்ணுலமா , சும்மாதா கூப்பிட்டேன்" - திரும்பாமலே கூறினால்...

முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் "மறுபடியும் பார்க்கலாம்" - வண்டியை வேகமாக செலுத்தினேன்.

சிறிது தூரம் வந்தபிறகு, ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தி ஒரு சிகெரெட்டும், டீ யும் வாங்கிக்கொண்டு நண்பனுக்கு கைப்பேசியில் அழைத்து வரச்செய்தேன்.
----------------------------------------------------------

விடியற்காலை 6.30 am

நண்பனிடம் சிறிது உரையாடி விட்டு, பிறகு முன்கதைச்சுருக்கம் கூறினேன்.

"மச்சா Browsing சென்டர் எங்கடா இருக்கு" என்றேன்.

"நம்ம காலேஜ் முன்னாடி இருக்குதுல்ல"

"இந்நேரத்துல திறந்திருக்குமா?"

"அவன் 7 மணிக்கெல்லாம் திறந்திருப்பான்"

நான் கல்லூரி படிப்பு முடித்த அதே ஊரில்தான் அவள் வீடும் இருந்தது. அதுவும் என் கல்லூரிக்கு சற்று பின்புறம் எனக்கு மிகவும் பரிச்சயமான வீதிகள்.

-------------------------------------------------------------
விடியற்காலை 7.15 am

பிரெளசிங் கிளம்பினோம். சர்வே எடுக்கும் அட்டவணை சீட்டு போன்ற பேப்பர்களை தயார் செய்து தேவையான பிரதிகள் எடுத்துக்கொண்டேன். அதில் தேவையில்லாத சில பெற்றோர், முகவரி, வேலை காலங்களுடன் கல்லூரி, பள்ளி, படிப்பு, உட்பிரிவு, பொழுதுபோக்கு, சிறப்புத்தகுதிகள் என தேவைப்பட்ட(எனக்கு) காலங்களையும் சேர்த்துக்கொண்டேன்.

"என்னடா அருண் பண்ணப்போற?"

"பொறுடா மச்சா"

--------------------------------------------------------------------

முற்பகல் 10.30 am

சரியாக அவள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி கணக்கெடுப்பை ஆரம்பித்தோம்.

---------------------------------------------------------------------
முற்பகல் 11.23 am

"டிர்ரிங்.. டிர்ரிங்.."

"யாரு ?", கதவு திறந்தபடியே, அவள் அம்மாவாக இருக்கலாம்.

"சர்வேங்க"

"உள்ள வாங்க, எலெக்சனுக்கா?"

"பரவால்லீங்க, "எலெக்சன் இல்லீங்க, இது காலேஜ் ப்ராஜக்ட்டுக்காக" போர்டிகோவில் நின்றபடி.

"அப்டியா? எந்த காலேஜ்?"

"நம்ம RVS தாங்க" பழைய ஐடி கார்டை காண்பித்தபடி, "வீட்ல எத்தன பேருங்க?" என ஆரம்பித்தேன்.

மாமனார், அத்தை, பாட்டி விபரங்கள் முடிந்து என் வீட்டுக்காரியின் முறை..

"பேரு" "வதனா"

"வயசு" "19"

"படிப்பு" " B.Sc, ரெண்டாம் வருஷம், இந்துஸ்தான் காலெஜ்"

" B.Scல என்ன?" "ஏதோ Viscomநு சொல்லுவா"

"சரிங்க, ரொம்ப நன்றி" "வரேன்"

(கண்டிப்பா வருவேன், ஆரத்தி கரச்சு வைங்க...)

No comments:

Post a Comment