Sunday, August 2, 2009

மின்னலே நீ வந்ததேனடி - முதல் பயணம் III

"என்னவளே அடி என்னவளே" பாடல் ஒரு இருநூறு முறையாவது ஒலித்திருக்கும்.
பார்க்கும் இடங்களில் எல்லாம் ஒரு அழகு தெரிந்தது. அடுத்தமுறை அவளைக்காண மனம் துடித்துக்கொண்டிருந்தது.

அதற்கான சந்தர்ப்பம் இவ்வளவு விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.
அம்மாவின் சொந்தத்தில் அண்ணன் மகளின் திருமணம் என்று காங்கயம் அருகே சென்றிருந்தேன்.எனக்கு மாமன் மகள் முறை, ஒரு கல்லூரியில் வேலை மாப்பிள்ளை சொந்த தொழில்.ஒரு மனமாக திருமணத்திற்கு சென்றேன். இரவு அங்கேயே தங்குவதாக முடிவு.

மாலை மண்டபத்திற்கு சென்று உபச்சாரங்களையும், உபத்திரங்களயும் முடித்துக்கொண்டு, ஒருபக்கம் சீட்டாட்டமும் , இன்னொருபக்கம் ஊர்கதையும் சூடு பிடித்திருந்தது. எதற்கு ஓடுகிறோம், எதற்கு துரத்தப்படுகிறோம் என்ற இலக்கே இல்லாமல் சிறுவர்களின் ஓட்டம் சிரிப்புகளுக்கிடையே தொடர்ந்துகொண்டிருந்தது. வெத்தலை பாக்கின் மனம், கலைந்த இரும்பு சேர்கள், அங்ககே ஜமுக்காலம் விரிக்கப்பட்டு அதில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள், மூடி வைக்கப்பட்ட வாத்தியங்கள் இதையெல்லாம் தாண்டி மாடிக்கு (திருட்டு) தம் அடிக்க சென்றேன். என் தம்பிக்கு நான் தம் அடிப்பது தெரியும் என்பதால் அவனும் என் உடன் மாடிக்கு வந்திருந்தான். மாடித்திட்டில் மங்கியிருந்த இருட்டில் நான் தம் அடித்துக்கொண்டே அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன்.



காட்சிI

சின்ன சின்ன கொலுசு சத்தங்களும் , சிரிபொலிகளும் மாடிப்படி வழியாக நெருங்கிக்கொண்டிருந்தது. சிகரெட்டை அனைத்துவிட்டு அவனிடம் பேச்சைத் தொடர்ந்தேன். நெருங்கிய சத்தங்கள் நின்றுவிட , நின்ற இடத்தை திரும்பிபார்த்தேன். இருட்டிற்கு சிரிப்பொழிகளால் விளக்கேற்றிக்கொண்டிருந்தது ஒரு தேவதைக்கூட்டம். அதில் ஒன்றிரண்டு முகம் எனக்கு பழக்கப்பட்டவைகள்.அதில் ஒருத்தி எப்பொழுதும் என்னிடம் வம்பிழுக்கும் என் அத்தைப்பெண்.



"ஏண்டா, யார்ர இத்தனை பொண்ணுக? நா பார்த்ததுஇல்லையே?"



" எல்லா அக்காவோட ஸ்டூடண்ட்ஸாமா "



"ஹ்ம்ம்ம்"



அங்கிருந்து ஒரு குரல் " டே பாலா இன்னும் தூங்காம இங்கென்னடா பண்ணிடிருக்கே?

நைட்டுல்ல காத்து கருப்பு அடிச்சுரபோகுது, அதுவும் பக்கத்திலேயே இருக்கு" ( சிரிப்பொலி)...



"எல்லா காத்து கருப்பும் இன்னார ஊரவிட்டே ஓடிருக்கும், நம்மளவிட ஒரு ராட்சஷி வந்துட்டானு, நீ பயப்படாதடா பாலா" இது நான்



"போடா குண்டா! இரு நீ தம் அடிக்கிறத அத்தகிட்ட சொல்றே"

"அடிங்க... " என்று அதட்ட, "அடிப்ப அடிப்ப " என்று சொல்லிவிட்டு நகர்ந்தது தேவதைக் கூட்டம்.



காட்சிII



இருட்டிலிருந்து சட்றே வெளிச்சமான பகுதிக்குச் சென்று வட்டமாக அமர்ந்து ஏதோ கதை
தொடங்கியது.



ஒரு நிமிடம் என் கண்களையே நம்ப முடியவில்லை.. நன்றாக தேய்த்துக்கொண்டு மீண்டும் உற்றுப்பார்த்தேன். என் வதனா இங்கே எப்படி?



"டே அக்கா எந்த காலேஜ்ல வொர்க் பண்றாங்க?"

"இந்துஸ்தான் காலேஜ்னா"



சின்ன சின்ன சிரிப்பொழிகள் தொடர அத்தனை பேரும் Out of Focus'ல் செல்லத் தொடங்கினர்.



"ஒரு முறையாவது உன் பார்வையால் தீண்டிவிடு பெண்ணே, மோட்சம் பெருவேன்"
என் மனதிற்குள் ஒலிக்க அவள் பார்வைக்காக தவம் இருந்து மயங்கிபோனேன்.



"உன் பெற்றேரை பார்த்திருக்கிறேன், அவர்கள் மனிதர்கள்தானே நீ மட்டும் எப்படி தேவதையானாய்" என்ற டி.ஆர்.தாசன் கவிதை மனதுக்குள் ஒலிக்க மெல்ல சிரித்துக்கொண்டேன்.

"இரு நான் கொண்டுவரே" என்று சத்தம் கேட்க என்னை பார்த்தவாரு எழுந்து என்னை நோக்கி வந்தாள். இதயம் துடிக்கும் சத்தம் அவள் காலடியில் கேட்டது. என் அருகில் வந்து என்னைக் கடந்துசென்று, பாலாவை பார்த்து தலையாட்டிவிட்டு படியில் இறங்கிச் சென்றால்.

" அடச் சே என்னப் பார்த்து சிரிக்கிலயா" என நொந்துகொண்டேன்.

பாலாவை கிழே தாட்டிவிட்டு படிதிரும்பும் இடத்தில் அவளின் வருகைக்காக காத்திருந்தேன்.



"10த் நல்லா படி பாலா"...."ஹ்ம்ம்ம்"



காட்சிIII



இது நிச்சயம் அவள் குரல்தான். மாடிகளில் ஏறி என்னை நெருங்கும் போது



"ஹாய்" என்றேன்.

லேசாக முறைத்தபடி என்னைத் தாண்டி நகர்ந்தால்.



" என்னங்க எதும் பேசாம போறீங்க"



" என்ன பேசசொல்லறீங்க"



" என்ன நியாபகம் இல்லையா?" அன்னிக்கு....



"ஹ்ம்ம்ம் நல்லா தெரியுமே"



"கோபமா?"



கோபத்துடனே "இல்லை" என்றால்..

" பார்த்தா கோபம் இல்லாத மாதிரி தெரியலையே..."



"அதெல்லா ஒண்ணு இல்லை" சொல்லியவாரே படியேரத்தொடங்கினால்...

"காதலென்றால் பெரும் அவஸ்த்தையென்று உன்னை கண்டதும் கண்டுகொண்டேன்"
பாடியதற்கு பதிலே இல்லாமல் சென்றுவிட்டால்...



இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் அவளின் நினைவு மட்டுமே...காலையில் காதலை சொல்லிவிடுவதென்று முடிவில்... கனவுகளுக்காகவே உறக்கத்திற்கு சென்றேன்.

-------------------------------------------------------------------------------------------------

மேலே சொன்ன அதே காட்சிகளின்போது வதனாவின் பார்வையிலிருந்து...



காட்சிI

"ஹே இவனத் தாண்டி சொன்னே... அன்னைக்கு வீட்டுக்கு வந்து... இவனேதாண்டி"



காட்சிII

சென்று அமர்ந்த பிறகு...



என் அத்தை பெண்ணிடம் நான் யார் என்பதைப் பற்றிய மறைமுக விசாரனைகள்.

மெதுவான சீண்டல்கள்.



"ஹே உன்னத் தாண்டி பாக்குரா..."



"புடிச்சுருக்குனு சொன்னியே. போய் பேச வேண்டியதுதானே..."



" நீ அவன பாக்காத"



"கொஞ்ச நேரம் பொறு"



"அவங்கிட்ட பேசர மாதிரி போய் கிழே போய்ரு"



"ஹ்ம்ம்ம்"



காட்சிIII

என்னிடம் பேசிவிட்டு ( தூண்டிவிட்டு) சென்றபிறகு...



"என்னடி ? எதாவது சொன்னானா?"



"ஐயா, யாரும் கவனிக்கமாட்டோனு நெனச்சு படியிலேயே நின்னிட்டிருந்தாரு..."

"இருடி! நீ சொல்லு என்ன சொன்னா?"

"ஒன்னு சொல்லல, என்ன தெரியுமானா? எதோ சொல்ல வந்தா முறைச்சே! அப்படியே பாட்டா மாத்திட்டா"

"ஹ்ம்ம்ம் ... பாக்கலா நாளைக்காவாது எதாச்சு சொல்லரானானு"


"ஹேஏஏ சும்மா இருடி, வேறே எதாவது பேசு" வதனா



"ஹ்ம்ம் இதவிட வேற என்னடி இன்னிக்கு இருக்கு"



"அதானே... இன்னிக்கு உன்ன சும்மா விட்டுறுவோமா"

".................." பேச்சு நீண்டு கொண்டே ஒவ்வொருவராக உறங்கச்சென்றனர்...

விடியலுக்காக காத்திருந்தது விடியலும்... எனது காதலும்...



--------------------------------------------------------------------------------------------------------------------------------


திருமணம் என்பதால், விடிவதற்கு முன்பே எல்லாரும் தயார் ஆகிக்கொண்டிருந்தனர். நானும் எழுந்து தயாரகிக்கொண்டிருக்கும் போது, என் அத்தை பெண்ணிடம் இருந்து இரவு அவர்களுக்குள் நடந்த எல்லா உறையாடல்களும் என்னை வந்து சேர நான் கொஞ்சம் உசார் ஆனேன்.
மன‌ம் ஆகாயாத்தை நோக்கி துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது.பல பழைய காதல் பாடல்கள் என் மனதிற்குல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. அவளின் வருகைக்காக காத்திருந்தேன். மனம் கவிதை பாட துவங்கியது.
இதோ என் எதிரில் பொன் வண்ண‌ சுடிதாருடன்,


" உன் பாதம் நோகப் போகுதடி,
பூக்களை மிதிக்காதே,

தென்றலும் புயல் வலி தருமோ?
உன்னைத் தீண்டும் பொழுது...

விடியும் முன் சூரியன்,
உன் விழி இரண்டில் கண்டேன்...

உன் மொழி கேட்க்க,
தோற்றது என் கவி... "

என்னையும் அறியாமல் மனம் மொக்கை கவிதைகளை உளர ஆரம்பித்தது.
நெருங்கி வ‌ந்தால், " கோப‌ம் தீர்ந்த‌தா? " என்றேன்.
எதும் பேசாம‌ல் ம‌ண‌ப்ப‌ந்த‌லையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

மிக‌வும் அட‌மான பெண் போல‌ காட்டிக்கொள்ள‌ அவ‌ள் செய்த‌ முய‌ற்சிக‌ள் யாவும் என‌க்கு சிரிப்பையே வ‌ர‌வ‌லைத்த‌து.
கையில் மஞ்சள் அரிசியை எடிடுத்துக்கொண்டு, அவளை ஒரு முறை பார்த்தேன்.தூரதிலிருந்து எங்கள் மீது விழும் அவள் தோழிகளின் பார்வைகளை அலட்சியம் செய்தேன்.அவள் என் அருகில் என்னுடன் தனியாக நின்று கொண்டே மணப்பந்தலையும், சடங்குகளையும் கவனிப்பது போல் செய்த பாவனைகள் பிடித்திருந்தது.

"உன்கிட்ட ஒன்னு சொல்லனும்'‍ இது நான்

"ஹ்ம்ம்ம்ம்"

" அங்க பாரு அந்த லேசர் லைட்ல இருந்து வர வெளிச்சத்தை அந்த குழந்தைக பிடிக்க முயற்சி பண்றத"

" ம்ம்ம்ம்ம்? " என்ன என்று கேட்பது போன்ற பாவனையுடன்.

" இந்த மாதிரி லைஃப்ல நிறைய விசயங்களை நாம ரசிச்சாலும் எல்லாத்தையும் நம்மலால அடைய முடியாது..."

அவளிடம் ஆழ்ந்த மெளனமும் குழப்பமானா பார்வைகளும்.

"புரியலயே'

" நா இத சொல்ல வேண்டானுதான் நெனச்சேன், ஆனா சொல்லாம இருக்க முடியல, எனக்குனு ஒருத்தி எப்படியல்லாம் இருக்கனும்னு இதுவரைக்கு நெனச்சதில்லை...
ஆனா, உன்னப் பார்த்தற்கப்புறம் இப்படித்தான் இருக்கனும்னு ஆசைப்படறேன்"

அவள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்க செய்த முயற்சிகள் யாவும் தோல்வியைத் தழுவி, லேசான சந்தோசம் வெளிப்பட்டது.

"அதுக்கு?"

" அதுக்குனு நா உன்ன லவ் பண்றேனு சொல்லல"

மீண்டும் சின்ன குழப்பம் அவள் முகத்தில்...

" சொல்லியிருப்பேன், ஒரு வேளை அதோ அங்க நிக்கறாலே என் அத்தை பொண்ணு, அவளை எனக்குனு முடிவு பண்ணாம இருந்தா... நா சின்ன வயசா இருக்கும் போது இருந்தே அவ எனக்குனு முடிவு பண்ணிட்டாங்க. அவளும் என் மேல ஆசை வெச்சிருக்கா, இப்ப போய் நா எங்க அம்மாகிட்ட அவளை நான் கட்டிக்க முடியாதுனு சொன்னா அது நடக்காது. கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன், உங்கிட்ட அதிகமா பழகாமையே உன் பிரிவு எனக்கு இவ்வளவு வலி கொடுக்குதுனா, இத்தன வருசமா என்னையே நினச்சுருப்பாளே, அவளால இத தாங்கிக்க முடியுமானு... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இத உங்கிட்ட சொல்லாம இருக்க முடியல அதான் சொல்லிட்டேன். We can't have all that we desire,but God will give us all that we deserve"
அடுத்த ஜென்மம் பற்றி தெரியாது இருந்தா நீ எனக்கு காதலியா வேணும்."

நான் சொல்லி முடிக்க முடிக்க அவள் முகம் வாடத்தொடங்கியிருந்தது. சட்டென எதுவும் சொல்லாமல் மணமகள் அரை நோக்கி சென்றால்.

அவள் உள்ளே சென்ற சிரிது நேரம் கழித்து, என் அத்தை பெண்ணிடம் நடந்ததை சொன்னேன்.

" உனக்கு விளையடரதுக்கு ஒரு அளவில்லையா, பாவம்தாண்டா வதனா" என்னைத்திட்டியவாரே மணமகள் அறை நோக்கிச் சென்றால், நானும் தொடர்ந்தேன்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍-------------------------------------------------------------------------

கதவில் சாய்ந்தவாறு நான் நின்றுகொள்ள, கட்டிலில் முகம் புதைந்துபோன வதனா அருகில் என் அத்தை பெண் அமர்ந்து அவள் தோள்களைப் பற்றி,
" ஹே வதனா , இங்க பாரு, என்னாச்சு உனக்கு?'
" ஒன்னும் இல்லை" சமாளித்தபடி முகத்தை துடைத்தவாரே எழுந்தால், அவள் கண்கள் சிவந்து சற்றே வீங்கி இருந்தது, ஒப்பனைகள் எலலாம் கலைந்திருந்தது, அவளைப்பார்த்து புன்னகைத்த என்னிடம் இருந்து பார்வைகளை விலக்கினால்.
என் அத்தைப் பெண் அவள் முகத்தை திருப்பியபடி " அவ சொன்னதெல்லாம் நம்பிட்டியா? இவனப் போய் நான் கல்யாண பண்றதா" என்னைப்பார்த்து " போடா குண்டா..."

" அப்போ...." என்ற வதனாவை முடிக்க விடவாமல் " நீ எப்பவோ என் உயிரோடு கலந்துவிட்டாய் , வதனா..." என்றேன்.
கண்களை துடைத்தவாறு வேகமாக எழுந்து வந்து என் நெஞ்சில் குத்த உரைந்து போனேன், இரண்டாம் குத்தில் உயிர் பெற்றேன் , என் மார்போடு சாய்ந்தவளை என் உயிரோடு அனைத்துக்கொண்டேன்...

"ம்ம்ம்ம் கட்டி மேளம், கட்டி மேளம்" சத்தம் ஒலிக்க, டும் டும் டும் என மங்கள வாத்தியம் வேகமாக முழங்க, எங்கிருந்தோ அச்சதை எங்கள் மேல் வந்து விழுந்தது...


******** சுபம் ***********

No comments:

Post a Comment